கோவை : கோவை (22.02.2023) அன்று மாலை சுமார் 6:12 மணியளவில், கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த சசிகுமாருக்கு HDFC கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்டுகள் தருவதாக செய்தி வந்தது. HDFC கிரெடிட் கார்டில் இருந்து வந்த செய்தி என்று நம்பி, அந்த லிங்கை கிளிக் செய்து, அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யச் சொல்லி, அதை இன்ஸ்டால் செய்து, நெட் பேங்கிங் யூசர் ID மற்றும் பாஸ்வேர்டு, OTP ஆகியவற்றை பதிவு செய்து, பின்னர் தனது மூன்று HDFC வங்கிக் கணக்குகளிலிருந்து 8 பரிவர்த்தனை மூலம் முற்றிலும் ரூ. 9,24,188/-இழந்தது தெரியவந்தது.அவர் காவல்துறையில் மனு அளித்து கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் உத்தரவுப்படி கோவை சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திரு.அருண் அவர்களின் தலைமையில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்தத் தொகை ரூ.8,46,689/- மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவரின் கணக்கில் செலுத்தப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்