வேலூர்: மைதானங்களில் கூடி கிரிக்கெட் மற்றும் வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டுவருகிறார்கள் அப்போது அவர்கள் முகக்கவசம் அணிவதில்லை சமூக இடைவெளியையும் கடைபிடிப்பதில்லை அப்படி ஒரு ருசிகரமான சம்பவம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள அரசு திருமகள் ஆலைக் கல்லூரி மைதானத்தில் நடந்துள்ளது.
குடியாத்தம் அரசு திருமகள் ஆலைக் கல்லூரி மைதானத்தில் ஊரடங்கு விதிகளை மதிக்காமல் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கிரிக்கெட் வாலிபால் என முக கவசம் கூட அணியாமல் விளையாடிக்கொண்டிருந்தனர்.இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஜீவா குடியாத்தம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலை அறிந்த குடியாத்தம் காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனரகாவல்துறை வாகனம் வருவதைக் கண்ட மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் அங்கிருந்து அங்கு இங்கு என ஓட்டம் பிடித்தனர்.
இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தங்கள் வாகனத்தை எடுத்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று மின்னல் வேகத்தில் பறந்தனர்பின்னர் வாக்கி டாக்கி மூலம் அவர்களை குடியாத்தம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் எச்சரித்து அனுப்பினார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.