பெரம்பலூர்: திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்களின் Carrier Guidance Programme-ன்படி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில்
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. M.S.M.வளவன் மற்றும் அவரது குழுவினரான தலைமைக் காவலர்கள் திரு.நடராஜன் மற்றும்
திரு.அற்புதராஜ் ஆகியோர்கள் இன்று 02.09.2021 -ம் தேதி பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் பெரம்பலூர் மாவட்டம் கொளப்பாடி மற்றும் துறைமங்கலம் கிராமத்தினைச் சேர்ந்த சுமார் 40 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை கொண்டு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.முரளிதரன் அவர்களின் மேற்பார்வையில் மேற்படி நபர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெற நடவடிக்கைகள் மேற்கொண்டும், அவற்றில் 7 நபர்கள் தமிழக அரசால் நடத்தப்படும் குரூப் தேர்வுகள் எழுத பயிற்சி வகுப்பில் சேர்த்துவிடப்பட்டனர்.
மீதமுள்ளவர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப வேலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அங்கு போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவ மாணவிகளை சந்தித்த துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.M.S.M.வளவன் அவர்கள் போட்டித் தேர்விற்கு மேலும் சிறப்பாக பயிற்சி செய்ய உந்துதலாகவும், உற்சாகபடுத்தும் வகையிலும் அறிவுரைகளை வழங்கினார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை