திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா கொடிவலச காலனியை சேர்ந்த (24) வயது இளம் பெண்ணை அத்திமாஞ்சேரி மேல் காலனியை சேர்ந்த ஜெயக்குமார் (24) என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று தனது நண்பரான அத்திமாஞ்சேரி மேல் காலனியை சேர்ந்த விஜய் (27), என்பவருடன் சேர்ந்து காரில் அந்த பெண்ணை கடத்த முயன்றனர். இதையடுத்து அந்த பெண் கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு ஜெயக்குமாரையும், அவரது நண்பர் விஜயையும் பள்ளிப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.இது குறித்து காவல் ஆய்வாளர் திரு.ராஜு வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.