கரூர் : கரூர் மாவட்டம், தென்னிலை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கரூர் to கோயம்புத்தூர் மெயின் ரோட்டில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக ஆதரவற்ற நிலையில் இருப்பதாக கிடைத்த தகவலறிந்து, தென்னிலை காவல் நிலைய காவலர்கள் அப்பெண்ணை மீட்டு அவருக்கு உணவும், உடைகளை வழங்கி சாந்திவனம் மனநல காப்பக நிர்வாகத்தினரிடம் அப்பெண்ணை ஒப்படைத்தனர். தகவல் கிடைத்த உடனே விரைந்து வந்த பெண்ணை மீட்ட காவல்துறையின் செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.