மதுரை : ஜூலை 21 சிந்தாமணி நடுத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மனைவி நாகவல்லி (44) .இவருக்கு திருமணம் ஆனது முதல் குழந்தை இல்லை. இதனால் கணவர் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கணவரை பிரிந்து நாகவல்லி தனியாக வசித்து வந்தார். இதனால் மன அழுத்தத்திலும் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அண்ணன் ராமர் (53) கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நாகவள்ளியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி