கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் 25. இவரும் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் எடக்குடியை சேர்ந்த விஜயலட்சுமி 22 என்பவரும் காதலித்து கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இந்த தம்பதிக்கு 1½ வயதில் விஸ்வா என்ற ஆண் குழந்தை உள்ளது. விஜய் தனது மனைவி, குழந்தையுடன் ஈரோட்டில் தங்கி, அங்குள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த விஜயலட்சுமி தன் உடல் மீது மண்எண்ணெயை் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீக்காயங்களுடன் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்த விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.