கோவை : கோவை சரவணம்பட்டி பக்கம் யமுனா நகரில் உள்ள முட்புதரில் இன்று மதியம் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது.அதைப் பிரித்து பார்த்தபோது அதில் கை.கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் பிணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று அடையாளம் தெரியவில்லை.இந்த பெண்ணுக்கு 25 வயது இருக்கும். இவரை யாரோ கொலை செய்து சாக்கு மூட்டையில் பிணத்தை அடைத்து வீசி சென்று உள்ளனர். .இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
