கிருஷ்ணகிரி : கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மேட்டுப்பாளையம், காரமடை,சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் இளம் பெண்கள் மற்றும் குடும்பப்பெண்களை இதே மாதிரி பயண்படுத்தி இத்தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இதற்காக தனது வீட்டினை விபச்சாரத்திற்கு ஏற்றவாறு அறைகளை ஏற்படுத்தி தயார் செய்தும் வைத்திருந் திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று காரமடை அருகே உள்ள தொட்டிபாளையத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் குடும்ப பிரச்சினை காரணமாக சில நாட்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவரிடம் பெண் விபச்சார புரோக்கரான பாக்கியலட்சுமி தன்னிடம் இளம்பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்
. அதற்கு ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த. இளைஞர் தன்னிடம் பணம் இல்லை என்றும் அருகில் உள்ள ஏடி.எம்.மில் இருந்து பணம் எடுத்து வருவதாக கூறிச் சென்றார். பின்னர் காரமடை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காரமடை காவல் துறையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்
.அப்போது அந்த வீட்டில் இளம்பெண்கள் மற்றும் குடும்ப பெண்கள் விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தியது உறுதியானது. தொடர்ந்து 70 வயதான பாக்கியலட்சுமி என்ற மூதாட்டி விபச்சார புரோக்கரை கைது செய்ய சென்றபோது அங்கு தன்னை பிடிக்க வந்தால், தான் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விடுவதாகவும, அங்கு இருக்கும் மற்றவர்களையும் மற்றும் காவல்துறையினரையும மிரட்டினார்.
பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அந்த மூதாட்டியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி காரமடை காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
பின்னர் அந்த பெண்புரோக்கரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.