காலை உணவை தவிர்ப்பதால் உடலுக்கு பல உபாதைகள் வந்து சேரும், அவற்றில் சில முக்கியமானவை: உடல் பருமன், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், முடி உதிர்தல், தலைவலி, குடல் புண், மூளைசோர்வு.
காலை உணவு என்பது அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக, மகிழ்ச்சியாக இருக்க வேளை செய்ய உதவும்.
காலை உணவு எடுத்து கொள்ளவில்லை என்றால் இரைப்பை காலியாக இருக்கும். இதனால் இரவில் இயல்பாக சுரந்துள்ள பித்தநீர் மெல்ல தலைக்கு ஏறும் அபாயம் உள்ளது. இதனால் தலைவலி, தலைசுற்றல் கண் எரிச்சல், வாந்தி போன்றவை ஏற்படும்.
வயிற்றில் ஏற்படும் புண் (stomach ulcer), வயிற்று உப்புசம் (gastritis) என்று கூறப்படும் தீராத வலி மற்றும் வாந்தி, மயக்கம், ரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகியவை காலை உணவு சாப்பிடாததால் ஏற்படும் பிரச்சனைகள் ஆகும்.
உடலுக்கு தேவையான கலோரிகள் குறைந்து சோர்வு ஏற்படும் மேலும் உடலின் கலோரியும் குறைவதோடு உடலின் வளர்சிதை மாற்றத்தில் சிதைவை ஏற்படுத்தும். காலை உணவை எடுத்து கொள்ளாவிட்டாலும் இயல்பாக சுரக்கும் ஜீரணிக்கும் அமிலம் சுரந்து கொண்டேதான் இருக்கும்.காலை உணவு எடுத்து கொள்ளவில்லை என்றால் இந்த அமிலங்கள் செரிமானம் செய்ய உணவு இல்லாததால் குடலை அரிக்க தொடங்கி விடும். இதனால் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.
மேலும் காலை உணவு சாப்பிடாதவர்கள் மதிய உணவையும் திருப்தியாக சாப்பிட முடியாது. கொஞ்சம் சாப்பிட்டவுடனே வயிறு நிறைந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக காலை உணவை சாப்பிட வேண்டும். காலை உணவை தவிர்த்தால் மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டு அதனால் வேறு சில சிறு சிறு பிரச்னைகள் தோன்றி கடைசியில் உயிருக்கேகூட ஆபத்தாய் முடியும்.
காலை உணவை தவிர்ப்பதால் அன்றாடம் உடல் உறுப்புகளுக்கு செல்ல வேண்டிய சத்து செல்லாமல் பற்றாகுறை ஏற்படும் போது, செல்களுக்கு சத்து குறை ஏற்படும் போது சோர்வு அடைதல், முடி உதிர்வு keratin என்னும் சத்து குறைவால் ஏற்படும்.மன அழுத்தம் ஏற்படும், சிறு சிறு விஷயங்களுக்கு கூட கோபம் வரும்.
சரியாக யோசிக்க, சிந்திக்க முடியாது.
காலையில் ராஜா போல சாப்பிடணும், மதியம் மந்திரி மாதிரி சாப்பிடணும், இரவில் பிச்சைக்காரன் மாதிரி சாப்பிடணும்.அதாவது, காலை வயிறு நிறைய, மதியம் அறை வயிறு, இரவு கால் வயிறு உணவு. இப்படி தான் சாப்பிட வேண்டும்.
இதனை கருத்தில் கொண்டு நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதன் ஒரு பகுதியாக நேற்று வெள்ளிக்கிழமை காலை உணவாக இட்லி, பொங்கல் ஆகியவற்றை போரூர், லக்ஷ்மி நகர், வளசரவாக்கம், ஆழ்வார், திருநகர்,ஜாபர்கான்பேட்டை,அசோக் நகர், விருகம்பாக்கம் மற்றும் கேகே நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 250 ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் அவர்களை சமூக இயக்கம் இந்த சமூக இடைவெளி கடைபிடிக்க செய்து கைகளை சுத்தம் செய்து முக கவசம் வழங்கி உணவு பரிமாறப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் ஏற்பாட்டின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர்.
பசி உணர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி அவர்களுடைய பசியை போக்கி சேவை செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. உணவு வழங்கும் உன்னத பணியினை தொய்வில்லாமல், களத்தில் இருந்து செயல்படுத்தி வரும் திரு.முகமது மூசா அவர்களின் பணி பாராட்டுதற்குரியது.