சென்னை, கொளத்தூர்: நியூஸ் போலீஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா தேசிய தலைவர் திரு. அ. சார்லஸ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், சமூக பொறுப்புணர்வை முன்னெடுத்து, அன்பும் கருணையும் பகிர்ந்தளிக்கும் நோக்கில், போலீஸ் நியூஸ் மற்றும் மீடியா சார்பில் சிறப்பு நற்பணி ஒன்று நடைபெற்றது.
இந்த நற்பணியில்,போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் திரு. அசோக் குமார் அவர்கள் சாய் சக்தி ஆதரவற்ற முதியோர் இல்லம், கொளத்தூர், சென்னை சென்றடைந்து, அங்குள்ள இல்ல தாயார் திருமதி சுபாஷினி ஜனா பஸ்டின் டி.எம்.ஆர் அவர்களுக்கு மரியாதையாக சால்வை அணிவித்து, இல்லத்தில் வசிக்கும் அனைத்து முதியோருக்கும். மழை மற்றும் குளிர்காலத்தை முன்னிட்டு அவர்களுக்கு போர்வை (பெட்ஷீட்) வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, இல்ல முதியோர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். சமூக நலனுக்காக இத்தகைய அன்பும் கருணையும் நிறைந்த பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
“அக்டோபர் 2025 மாதம் ‘இல்லாதவருக்கு இயன்றதை செய்வோம்’ ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற சமூக சேவை நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.” இந்த முயற்சியின் மூலம் சமுதாயத்தில் அன்பு, பகிர்வு மற்றும் மனிதநேயம் என்ற மதிப்புகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.