தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவின்படி காவல்துறையினருக்கு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து இரத்தஅழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உட்பட பல்வேறு சிகிச்சைக்கான இலவச பரிசோதனை முகாம் (18.12.2022), சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. லயோலா இக்னேஷியஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த மருத்துவ பரிசோதனை முகாமில் மதுரை அண்ணா நகரில் உள்ள ராக்ஸ் மருத்துவமனை மருத்துவர் திரு. ஹரிஷ்பாபு அவர்கள் தலைமையிலான மருத்துவர் குழுவினர் காவல்துறையினருக்கு பரிசோதனைகள் செய்து ஆலோசனைகள் வழங்கினர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுடலைமுத்து தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். இந்த முகாமில் ஆயுதப்படை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு. ஜெயராஜ், ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் திரு. மணிகண்டன், திரு. ஈஸ்வரமூர்த்தி, திரு. சதீஷ்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் சுமார் 250 பேர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.