திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் பி.எம்.எஸ் மருத்துவமனை மற்றும் ராமாபுரம் ஸ்ருஸ்தி கருவுறுதல் மையம் இணைந்து குழந்தை கனவு நனவாகும் மாபெறும் இலவச கருத்தரிப்பு ஆலோசனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த முகாமில் மருத்துவர்கள் சாமுண்டி சங்கரி, சரஸ்வதி,திவ்யா சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசோதனைகளையும்,சிகிச்சையினையும் அளித்தனர். இதில் கருப்பையில் சதைகட்டிகள் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் காரணமாக மாதவிடாய் நேரத்தில் பலவித பாதிப்புகள், இயற்கையாக கர்ப்பம் தரிக்க முடியாமை, கருக்குழாய்களில் அடைப்பு,தொடர் கருச்சிதைவு, கணவனின் விந்தணு குறைவால் கர்ப்பம் ஏற்பட தடை, (35). வயதுக்கு மேல் கருத்தரிப்பு பாதிப்பு,கருத்தடை செய்துகொண்டு குழந்தைக்காக மீண்டும் முயற்சி,PCOS, தைராய்ட் போன்ற ஹார்மோன் பிரச்சனை, தம்பதியாக உடல். மனஅழுத்தம் காரணமாக கர்ப்பம் தரிக்க பிரச்சனைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு