மதுரை: மதுரை மாவட்டம் அருப்புக்கோட்டையில், பெனியேல் , எஸ். பி. எம் .டிரஸ்ட் மற்றும் தி. ஐ. பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது . முகாமிற்கு, எஸ். பி. எம். டிரஸ்ட் நிறுவனர் எம் .அழகர்சாமி தலைமை தாங்கி, முகாமினை துவக்கி வைத்தார் . பாஸ்டர் ஜேசுதாஸ் முன்னிலை வகித்தார் . பாஸ்டர் ஜோஸ்வா கண்ணன் வரவேற்புரை ஆற்றினார் .
முகாமில், கண் மருத்துவமனை டாக்டர் தினேஷ் தலைமையில் மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு கண் பரிசோதனை செய்து, தகுந்த ஆலோசனை மற்றும் மருந்து வழங்கினர் . மருத்துவமனை மக்கள் தொடர்பாளர் சந்தான குமார் நன்றி கூறினார் .
முகாமில், 200க்கும் மேற்பட்ட கண் நோயாளிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி