கோவை: இலங்கையின் பிரபல தாதாவாக இருந்தவர் அங்கோடா லொக்கா. இவர்இ கடந்த மாதம் 3ம் தேதி மர்மமான முறையில் மரணமானதாகவும், மதுவில் விஷம் கொடுத்து அவருடைய காதலி அவரை கொன்றதாக இலங்கை செய்தி ஊடகங்களில் வெளியிட்டிருந்தது. போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இவர்இ கடந்த 2017-ல் 7 பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தார்.காவல் துறையினர் பிடியில் சிக்காமல் அங்கிருந்து தப்பி வந்து சென்னையில் தலைமறைவானார்.
இந்நிலையில், மதுரையை சேர்ந்தவரும், கோவை காளப்பட்டி ரோடு சேரன் மாநகரில் வசிப்பவருமான சிவகாமசுந்தரி(36), தனது உறவினர் பிரதீப்சிங் (35) என்பவரை உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி கடந்த 4ம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து, மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது சிவகாமசுந்தரி கொடுத்த ஆதார் அட்டையை ஆய்வு செய்ததில், பிரதீப்சிங் இல்லை என்பதும் பிரபல தாதா அங்கோடலொக்கா என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சிவகாமசுந்தரி, அவருடன் தாதாவின் காதலி அமானி தாஞ்சி(27) இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஈரோடு இந்திரா நகரை சேர்ந்த தியானேஸ்வரன்(32) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
தாதாவை எப்படி கொன்றார்கள் என்று பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.