கோவை : கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் 323 திருமதி. தங்கஇசக்கி அவர்கள் covid-19 தொற்று காரணமாக கடந்த 25/10/2020 அன்று இயற்கை எய்தினார். அவருடைய குடும்பத்திற்கு உதவும் பொருட்டு கோவை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் முதல்நிலை காவலர் 1018 திரு.பாபு என்பவர் உதவும் கரங்கள் வாட்ஸ்ஆப் குழு மூலம் கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் மற்றும் கோவை மாவட்ட தாலூக்கா காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் மூலம் ரூபாய் 1,60,000/- நிதிதிரட்டி திருமதி. தங்கஇசக்கி அவர்களின் பெற்றோர் திரு.முத்துராஜ் திருமதி.செந்தூரகனி அவர்களிடம் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.அர.அருளரசு இ.கா.ப., அவர்கள் இன்று (07/01/2021) பணத்தை வழங்கினார். பணத்தைப் பெற்றுக்கொண்ட தங்கஇசக்கியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்