திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மாவூர், பின்னவாசல், வடக்கு தெருவை சேர்ந்த காமராஜ் என்பவரின் மகள் செல்வி.கமலி (வயது-23). என்பவர் 2022-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக தேர்வாகி மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி கடந்த (13.05.2024) உயிரிழந்தார். இந்நிலையில் 2022-ம் ஆண்டு அவருடன் தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்த காவலர்கள், இறந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு உதவ முடிவு செய்தார்கள். அதன் படி, 2022-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்த காவலர்கள், 2022-ம் ஆண்டு கரம் கொடுக்கும் காக்கிகள் குழு சார்பாக Whatsapp மூலம் ஒன்று சேர்ந்து ரூ.14,34,650/- நிதி திரட்டினர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (20.09.2024) இறந்த பெண் காவலரின் குடும்பத்தினரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து 2022-ம் ஆண்டு காவலர்கள் ஒன்று சேர்ந்து திரட்டிய நிதி மற்றும் தென்னங்கன்றுகளை வழங்கினார்கள். அப்போது, 2022-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள் உடனிருந்தார்கள்.