திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மாவூர், பின்னவாசல், வடக்கு தெருவை சேர்ந்த காமராஜ் என்பவரின் மகள் செல்வி.கமலி (வயது-23). என்பவர் 2022-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக தேர்வாகி தற்போது, மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (14.05.2024) நேரில் சென்று இறந்த பெண் காவலருக்கு அஞ்சலி செலுத்தி, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி