வேலூர் : வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த மறைந்த பாலாஜி முதல் நிலை காவலர் கடந்த 14.01.22 ம் தேதி பணி முடித்து செல்லும் போது வாகன விபத்தில் உயிரிழந்தார். மேற்படி காவலரின் குடும்பத்தினருக்கு மாநிலம் முழுவதும் உள்ள 2010 பேட்ஜ் காவலர்கள் நிதி திரட்டி ரூபாய் 15,85,715/- மற்றும் வேலூர் மாவட்ட காவல் துறை சார்பாக ரூபாய் 4,25,000/- மொத்தம் ரூபாய் 20,10,715/- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ராஜேஷ் கண்ணன், இ.கா.ப., அவர்கள் மற்றும் திரு.K. S.சுந்தரமூர்த்தி (ADSP) அவர்கள் ,குடியாத்தம் DSP, குடியாத்தம் நகர மற்றும் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு மேற்படி நிதியை குடும்பத்தினருக்கு கொடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சி குடியாத்தம் அருகே உள்ள அமனாங்குப்பம் மதுரா மஹாலில் நடைபெற்றது.