தர்மபுரி : தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று A. பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் தெய்வத்திரு. விஜயகுமார் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 22.5. 2021 ம் அன்று காலமானார். அதற்காக அவருடன் 2011ம் ஆண்டு பணியில் சேர்ந்த தமிழகம் முழுவதும் உள்ள 2011 ஆம் ஆண்டு காவலர்கள் ஒன்றிணைந்து அவருடைய குடும்பத்திற்கு RS.22,58,156/- லட்சம் ரூபாய்கான நிரந்தர வைப்பு தொகைகைக்கான பத்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.கலைச்செல்வன் I.P.S அவர்கள் மூலமாக தெய்வத்திரு. விஜயகுமார் குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. அண்ணாமலை மற்றும் 2011ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.