திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறையில் ஊர்காவல்படை காவலராக பணிபுரிந்து வந்த திரு.S.சின்னச்சாமி த/பெ சுப்ரமணியம்மெயின்ரோடு மருதவனம், திருத்துறைப்பூண்டி என்பவர் புற்றுநோய் காரணமாக 23.06.21அன்று இறந்தநிலையில் அவரது இறுதி ஊர்வலம்மேற்படி சொந்த ஊரில் இன்று (24.06.21) காலை நடைபெற்றது. மாவட்ட காவல்துறையில் ஊர்காவல்படைபிரிவில் கடந்த 2009-ம் ஆண்டு பணியில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றி உடல்நலக்குறைவு காரணமாக இறந்த மேற்படி சின்னச்சாமியின்வீட்டிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் இன்று (24.06.21) காலை நேரில் சென்று காவல் மரியாதை செய்து அவரது குடும்பத்திற்கு ரூ.25000 பண உதவி செய்தார்கள்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா