காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் இளங்கோ என்பவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இது தொடர்பாக காவலர் இளங்கோ அவர்களின் குடும்பத்திற்கு அவருடன் பணிபுரிந்த 2017 காக்கும் உறவுகள் குழு காவலர்கள் சார்பாக ரூபாய் 20 லட்சத்து 74 ஆயிரத்து 50 ரூபாய் நிதி சேர்த்து காவலர் இளங்கோ அவர்களின் குடும்பத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கி.சண்முகம் அவர்களின் முன்னிலையில் காவலர்கள் கமல்ராஜ், விக்னேஷ், தமிழ் குமரன், மற்றும் செல்வ குமார் சேர்ந்து இளங்கோவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.