திருவாரூர் : தமிழக காவல் துறையில் 1993 ம் ஆண்டு பணியில் சேர்ந்து, திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் திரு.S.முரளிகிருஷ்ணன் அவர்கள் – இறந்த நிலையில் அவருடன் 1993-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்த காவலர்கள், இறந்த உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு உதவ முடிவு செய்தார்கள். அதன் படி, 1993-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்த காவலர்கள், 1993 ம் ஆண்டு காக்கும் கரங்கள் குழு சார்பாக Whatsapp மூலம் ஒன்று சேர்ந்து ரூ.6,88,000/- நிதி திரட்டினர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் (01.09.2024) இறந்த உதவி ஆய்வாளரின் குடும்பத்தினரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அத்தொகையினை வழங்கினார்கள். ஆயுதப்படை பொறுப்பு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.மணிகண்டன், மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் திரு.P.ராஜா, மற்றும் 1993-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள் உடனிருந்தார்கள்.