திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி சாலையில் நேற்று காலையில் சின்னாளபட்டியில் இருந்து பழனி நோக்கி TN 23 CF 6843 என்ற வாகனமும் பழனியில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி வந்த PY 05 Z 6871 என்ற வாகனம் திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள ராமையம் பட்டி என்னும் இடத்தில் முன்னே சென்ற வாகனத்தை முன்னேறி சென்றபோது எதிரே வந்த சின்னாளபட்டியில் இருந்து பழனி நோக்கி பயணித்த வாகனத்தில் அதிவேகத்தில் மோதியது.
இதில் பயணம் செய்த இருவருக்கு பலத்த காயமடைந்தனர்.இதனை அறிந்த திண்டுக்கல் தாடிகொம்பு காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர்கள் மற்றும் இதர காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து, விபத்து நடந்த இடத்தில் இருந்த வாகனங்களை அப்புறப்படுத்தி விபத்து ஏற்படுத்திய வாகனக் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா