கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் ஒரே தெருவை சேர்ந்த நாகராஜ்,சூர்யா இருவரும் அவர்கள் உறவினர்களுடன் நேதாஜி ரோடு புதூர் செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தது தொடர்பாக 04.11.2021 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு சூர்யா தரப்பு உறவினர்கள் ஏண்டா வண்டியை வழியில் நிறுத்தி உள்ளாய் என கெட்ட வார்த்தைகளால் பேசி இரு தரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டு கையால் அடித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து இருதரப்பிலும் ஐந்து நபர்கள் என பத்து நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.