வேலூர் : வேலூர் மாவட்டம், மெயின்பஜாரை சேர்ந்தவர் கிரிதரன் (29) மெக்கானிக். இவர் தனது மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இன்ஸ்பெக்டர் திரு.முத்துக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் திரு.அஜந்தா, மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வாலிபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில். அந்த மோட்டார் சைக்கிள் கிரிதரனுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. போலீசார் அந்த வாலிபரிடம் விசாரித்தனர். அவர் முள்ளிப்பாளையம் கே.கே.நகரை சேர்ந்த சரண்ராஜ் (30) என்பதும், கிரிதரன் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்