மதுரை : கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மார்க்கெட்டில் இரு கோஷ்டிகள் மோதல்: 12 பேர் மீது வழக்கு மதுரை ,கோரிப்பாளையம் சம்புரோபுரம்மார்க்கெட்டில் இரு கோஷ்டிகளுக்கு இடையே நடந்த மோதலில்1 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து , 7 பேரை போலீசார் கைது செய்தனர்.செல்லூர் பந்தல்குடி ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் சொக்கன் மகன் பாலமுருகன் 38. கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த பால்பாண்டி மகன் விக்னேஸ்வரன் 21. இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் ,இரு தரப்பினரும் கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, பாலமுருகனும், விக்னேஸ்வரனும் தனித்தனியே தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர் .போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு ப் பதிவு செய்து ,குமரவேல் மகன் விநாயகம் 19,பாலவிலாசம்மகன் காளீஸ்வரன் 21,பால்பாண்டிமகன் விக்னேஷ்வரன் 21,மதுரைவீரன்மகன் ரிஷிகுமார் 19, சொக்கர் மகன் பாலமுருகன் 38, முத்து மகன் அரவிந்த் 18,வெற்றிக்குமார் மகன் தினேஷ்குமார் 18 ,ஆகிய இரு தரப்பிலும் 7 பேரை கைது செய்து, மொத்தம் 12 பேர் மீது வழக்கு ப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி