திருவாரூர்: திருவாரூர் மவாட்டம் ஆலிவலம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட – ராயனல்லூர், செட்டிமூலை, தென்பாதி பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் ராஜ் @ ராஜேஷ்கண்ணன் 34. என்ற HS ரௌடி மற்றும்
நீடாமங்கலம், காவல் நிலைய பகுதியில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த – முல்லைவாசல், மாதா கோவில் தெருவை சேர்ந்த ஆசிர்வாதம் மகன் தினேஷ் 26. ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், மேற்படி நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.