கடலூர்: கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பூந்திரவள்ளியில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தொழில்முறை ஆலோசகராக சுவாமி நாதன் என்பவர் உள்ளார். நேற்று மதியம் இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, 4 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர், 700 கிலோ இரும்பு பொருட்களை திருடிக் கொண்டு இருந்தனர். இதை பார்த்த சுவாமிநாதன் ஊழியர்கள் உதவியுடன் மடக்கி பிடித்து புதுச்சத்திரம் போலீசில் ஒப்படைத்தார். 6 பேரையும் கைது செய்து இரும்பு பொருட்கள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.