பெரம்பலூர்: பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் வயதான நபருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய குருதி தேவைப்படுவதாக சமூக வலைதளங்களில் வந்த குருஞ்செய்தியினை கண்ட பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் திரு.ஸ்ரீதர் அவர்கள் இன்று 18.01.2022-ம் தேதி மேற்படி தனியார் மருத்துவமனைக்கு சென்று குருதி தேவைப்படும் நபரை சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறியும் குருதி வங்கிற்கு சென்று மேற்படி நபரின் பெயரில் தனது குருதியை தானமாக வழங்கியுள்ளார்.
மேற்படி காவலரின் செய்கையினை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் பெரிதும் பாராட்டினார்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.