சேலம் : மாவட்டம் காவல்துறை சார்பில், காவல் நிலையங்களில் அவசர தேவைகள் மற்றும் பொதுமக்கள் உதவிக்காக 24 மணி நேர இருசக்கர வாகன ரோந்து சேவை இன்று தொடங்கப்பட்டது. சேலம் மாவட்ட காவல் அலுவலகம்வில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கௌதம் கோயல், இ.கா.ப. அவர்கள், முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் செயல்படும் 11 காவல் நிலையங்களில் இந்த சேவையை தொடங்கி வைத்தார்.
















