சென்னை: சென்னை, பழையவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மகாவீர் 48. என்பவர், கடந்த 13.09.2021 அன்று இரவு, தனது வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு மறுநாள் வந்து பார்த்த போது,
அவரது இருசக்கர வாகனம் திருடு போயுள்ளது தெரியவந்துள்ளது. மேற்படி சம்பவம் குறித்து மகாவீர் H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்து மேற்படி இருசக்கர வாகன திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 1) வீரபெருமாள் 23. 2)கிஷோர் 20. ராயபுரம் 3) முகமது ஆரோன் ரஷித் 24. புதுப்பேட்டை ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.
மேற்படி விசாரணையில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் பழையவண்ணாரப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள் மற்றும் 17 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படிகுற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
