கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜபீர் என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை கார்போரண்டம் கம்பெனி முன்பு (06.08.2023) ஆம் தேதி காலை 08.00 மணிக்கு நிறுத்திவிட்டு வேலை செய்துவிட்டு மாலை 5.00 மணிக்கு வந்து பார்த்தபோது நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் காணவில்லை என அக்கம் பக்கம் தேடியும் விசாரித்து கிடைக்கவில்லை. என ஜபீர் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து சிப்காட் போலீசார் விசாரணை செய்து இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்து அவரிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்