கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் தேவர் முக்குளம் கிராமம் கௌரன் என்பவரின் விவசாய நிலத்தின் தன்னுடைய இருசக்கர வாகனத்தை (29.07.2023) ஆம் தேதி 8.00 மணிக்கு நிறுத்திவிட்டு விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் காணவில்லை. எனவும் அக்கம் பக்கம் தேடியும் விசாரித்து கிடைக்கவில்லை என கௌரன் (30.07.2023) ஆம் தேதி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து காவேரிப்பட்டிணம் போலீசார் விசாரணை செய்து இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்து அவரிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்