கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் அந்தேவனப்பள்ளி கிராமம்,ஓசஹள்ளி கிராமம் ஆகிய இரண்டு இடங்களில் குடியிருந்து வரும் நாராயணன், ராஜப்பா என்பவர்கள் வீட்டின் முன்பு 19.01.2025, 20.01.2025 ஆம் தேதி இரவு சுமார் 22.00 மணிக்கு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்களை யாரோ திருடி சென்று விட்டதாக தெரிந்து பல இடங்களில் தேடி கிடைக்காததால் தேன்கனிக்கோட்டை காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை செய்து இருசக்கர வாகனம் திருடிய மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.