கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் செல்வகுமார் என்பவர் ஆசிரியராக வேலை செய்து வருவதாகவும் 17.01.2025 ஆம் தேதி காலை சுமார் 8.30 மணிக்கு சென்னப்ப நாயக்கனூர் அருகே உள்ள மாருதி ஓட்டலுக்கு அவரது உறவினருடன் வாதி சாப்பிடுவதற்காக அண்ணனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் சென்று ஓட்டல் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் இல்லை என அக்கம் பக்கம் தேடியும் விசாரித்தும் கிடைக்கவில்லை என ஊத்தங்கரை காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை செய்து இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்து அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.