சென்னை: சைதாப்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ், வ/29, என்பவர் 15.04.2021 அன்று அவரது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு, 16.04.2021 பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து விக்னேஷ் R6 குமரன்நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து, R6 குமரன்நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், விசாரணை செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளின் உதவியுடன், மேற்படி இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற ராமு (எ) மொட்டை ராமு, வ/20, அடையாறு, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து புகார்தாரரின் இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டது, மேலும் அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.