தூத்துக்குடி: தூத்துக்குடியில், இருசக்கர வாகனம் கழுவும் போது பக்கத்து வீட்டுகாரருடன் ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சுப்பையா என்பவர் சில நாட்களுக்கு முன் தனது இருசக்கர வாகனத்தை ஆவுடையப்பனின் வீட்டின் முன்பு நிறுத்தி கழுவிக் கொண்டு இருந்தாக கூறப்படுகிறது.
அப்போது தண்ணீர் சாலையில் தேங்கியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதில் ஆத்திரமடைந்த சுப்பையா, நேற்றிரவு தனது மகன்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பலுடன், மாட்டுத்தொழுவத்தில் இருந்த ஆவுடையப்பனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார்.
தடுக்க முயன்ற ஆவுடையப்பனின் மகன் பெருமாளையும் அக்கும்பல் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளது.
தகவலறிந்த வந்து போலீசார் உடலை கைப்பற்றிய நிலையில், தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.