தூத்துக்குடி: புதுக்கோட்டை மறவன்மடம் ஜெபஆசிர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் செல்வராஜ் 32. என்பவர் தனது வீட்டின் முன்பு அவரது இருசக்கர வாகனத்தை கடந்த 10.11.2022 அன்று நிறுத்தி உள்ளார். பின்னர் மறுநாள் காலையில் பார்க்கும்போது அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது.
இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகார் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மறவன்மடம் மேற்கு தெருவை சேர்ந்த சண்முகவேல் மகன் நாகூர் பாண்டி 21. மற்றும் புதுக்கோட்டை பிரகாஷ் நகரை சேர்ந்த முருகேசன் மகன் முத்துக்குமார் 20. ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி செல்வராஜின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. மாடசாமி வழக்குபதிவு செய்து மேற்படி குற்றவாளிகளான நாகூர் பாண்டி மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 1,00,000/- மதிப்பிலான இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.