சென்னை,: R11 இராயலா நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் தேவா, (வ/21), அரவிந்த்ஹாசன் (எ) அரவிந்தன், (வ/27), போரூர் ஆகிய இருவர் என தெரியவந்தது. இன்று 10.06.2021 இராயலா நகர், அரசமரம் சந்திப்பு அருகே வாகன தணிக்கையின் போது கிடைத்த தகவலின் பேரில் அங்கு வந்த தேவா, அரவிந்த்ஹாசன் (எ) அரவிந்தன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.