சிவகங்கை : வெள்ளிக்கிழமை அன்று தேவகோட்டை அழகாபுரி தெற்கு தெருவில் நடந்த சவ ஊர்வலத்தில் குடி போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததுடன் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து தாக்கிய ரவுடிகளில் இருவர் கைது. இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும் இதில் தொடர்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் நிலையத்தில் ரவுடி சீட்டு தொடங்கப்பட்டு காவல் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. ராபர்ட் கென்னடி