திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் அஜாக்கிரதையாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் சாகசங்களில் (Wheeling) ஈடுபட்டு அதனை சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவாரூர் – கும்பகோணம் சாலையில் மஞ்சக்குடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட – கும்பகோணம் தாலுக்கா, திருச்சேறை, மெயின் ரோடு, 33-மேட்டிருப்பு பகுதியை சேர்ந்த திரிசங்கு என்பவரின் மகன் அஜய் (வயது-19) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் சாகசம் (Wheeling) செய்ய பயன்படுத்திய இருசக்கர வாகனம் கைப்பற்றபட்டது.
மேலும், திருவாரூர் மாவட்டத்தில் இதுபோன்று இருசக்கர வாகனத்தில் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை மேற்கொண்டு, வாகனங்களை பறிமுதல் செய்து, ஒட்டுனர் உரிமம் இரத்து செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.