மதுரை : மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும், வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும், நேதாஜி ரோடு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்களை, மஞ்சள் கோடு வரையப்பட்டு, இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டன.
மதுரை மாநகர் காளவாசல் சந்திப்பில் போக்குவரத்து காவல்துறையினர் பாதசாரிகள் சாலையை சிரமமின்றி கடப்பதற்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் சாலை விபத்துகளை தடுப்பதற்கும் ZEBRA CROSSING மற்றும் STOP LINE அமைத்தார்கள்..