கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக நடைபெற்ற இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்மந்தமாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் ஒசூர் உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் சூளகிரி காவல் ஆய்வாளர் திரு.K.M. மனோகரன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.V. கணேஷ்பாபு மற்றும் திரு.C ஆனந்தன் உள்ளிட்ட காவல் ஆளிநர்கள் அடங்கிய தனிப்படை குழு ஒன்று அமைக்கப்பட்டு அதனை தொடர்ந்து நேற்று 15.11.2021ம் தேதி காலை சூளகிரி அருகே மேற்படி தனிப்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது.
இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து நபர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தபோது 5 நபர்களும் தங்களது பெயர்களை முறையே 1. தட்சணாமூர்த்தி 26. கிருஷ்ணகிரி (மாவட்டம்) தற்போது அண்ணா நகர் வாணியம்பாடி ரோடு பர்கூர். 2 அரசன் 24. திருப்பத்தூர் மாவட்டம்) 3. சந்தோஷ் 19. திருப்பத்தூர் (மாவட்டம்) 4. சதிஷ் 6 சதிஷ்குமார் 24. 5. திருவேங்கடம் 31. திருப்பத்தூர் (மாவட்டம்) என்றும் கடந்த மாதம் சப்படி அருகே இருசக்கர வாகனத்தை திருடியதும் அதனையடுத்து சூளகிரியில் உள்ள ஒரு தக்காளி மண்டி அருகே இருசக்கர வாகனம் ஒன்றை திருடியதும் மேலும் குருபரப்பள்ளி. கிருஷ்ணகிரி தாலுக்கா. பர்கூர் மற்றும் ஒசூர் சுற்றியுள்ள பகுதிகளில் திருடியதையும் ஒப்புக்கொண்டவர்களை கைது செய்து அவர்கள் ஒட்டி வந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அவர்கள் பல ஊர்களில் திருடி பதுக்கி வைத்திருந்த மொத்தம் ரூபாய். 25 இலட்சம் மதிப்பிலான 41 இரு சக்கர வாகனங்களை கைப்பற்றி அனைவரையும் ஒசூர் குற்றவியல் நீதித்துறை நடுவர்-1 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று திருட்டு செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல் துறையின் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் அவர்கள் எச்சரித்துள்ளார்.
இப்படிக்கு ஓசூரில் இருந்து உங்கள் நிருபர் ஆ. வசந்த் குமார்