சென்னை:J–11 கண்ணகிநகர் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் திரு.கௌதம் (மு.நி.கா.40207), ஆயுதப்படை காவலர் திரு.சிலம்பரசன் (கா.52297) (ரோந்து வாகன ஓட்டுநர்) மற்றும் ஊர்க்காவல் படை வீரர் திரு.மணிகண்டன் (HG 4764) ஆகியோர் 17.10.2021 அன்று இரவு காவல் ரோந்து வாகன பணியிலிருந்தபோது,
கண்ணகிநகர், கல்லறை அருகில் 2 நபர்கள் 2 இருசக்கர வாகனங்களை தள்ளிக் கொண்டு சென்றதை கண்டு, அவர்களை விசாரிக்க அருகில் சென்றபோது, இருவரும் இருசக்கர வாகனங்களை கீழே போட்டுவிட்டு தப்பியோடினர். மேற்படி காவல் குழுவினர் துரத்திச் சென்று சிவராமன், 19, என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் பிடிபட்ட சிவராமன் தப்பியோடிய அவரது நண்பர் வீரமுத்து என்பவருடன் சேர்ந்து துரைப்பாக்கம் பகுதியில் மேற்படி 2 இருசக்கர வாகனங்களையும் திருடிக் கொண்டு வந்தபோது,
பெட்ரோல் தீர்ந்துவிட்டதால், தள்ளிக் கொண்டு வந்ததும், இருவரும் சேர்ந்து கண்ணகிநகர், துரைப்பாக்கம் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது.
J-11 கண்ணகிநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சிவராமன் கொடுத்த தகவலின்பேரில், தப்பிச் சென்ற வீரமுத்து, 29, கண்ணகிநகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு என்பவரை கைது செய்தனர்.
மேற்படி நபர்களிடமிருந்து 6 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் குழுவினர சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்