இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி, அரக்கோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. ஜாபர் சித்திக் அவர்களின் மேற்பார்வையில், அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் திரு. அசோகன் அவர்கள் தலைமையிலான போலீசார் (31.01.2026) மாலை அரக்கோணம் நகர காவல் எல்லைக்குட்பட்ட அம்பேத்கார் நகர், ஓடியன் மணி தியேட்டர் ஜங்ஷன் அருகே மேற்கொள்ளப்பட்ட தீவிர வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த குற்றவாளிகள் 1. வேலூரை சேர்ந்த பரமேஸ்வரன் 2. திருவள்ளூரை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு இடங்களில் இருந்து திருடிய 15 இருசக்கர வாகனங்கள்— including பல்சர், பேஷன் ப்ரோ, ஸ்ப்ளெண்டர்+, ஹோண்டா ஷைன் , டியோ, ஹோண்டா ஆக்டிவா போன்றவைகள் மீட்கப்பட்டன.
















