இராமநாதபுரம்: கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு மே 17ம் தேதி முதல் E-பதிவு முறையை கட்டாயமாக்கி உள்ளது
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் திரு கார்த்திக் IPS அவர்கள் உத்தரவின்பேரில் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் உட்பட்ட பகுதியில் நமது காவல்துறையினர் கொளுத்தும் வெயிலிலும்
வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் E-பதிவு இல்லாத வாகனங்களை சோதனை செய்து அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்புகின்றனர்.