இராமநாதபுரம்: 21.01.2023-ஆம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு, இராமேஸ்வரத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது சொந்த வாகனங்களிலும், வாடகை வாகனங்களிலும் வந்து செல்வார்கள். எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும்பொருட்டு, நாளை 20.01.2023 மதியம் முதல் 21.01.2023 இரவு வரை கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
1. இராமேஸ்வரம் நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் பேருந்து நிலையத்திலிருந்து சிவகாமிநகர், சல்லிமலை, இரட்டைப்பிள்ளையார் கோவில் தெரு, சௌந்தரியம்மன் கோவில் தெரு, சம்பை, மாங்காடு ரோடு வழியாக நகராட்சி பார்க்கிங், J.J. பார்க்கிங் மற்றும் கோவில் பார்க்கிங் செல்ல வேண்டும்.
2. மேற்படி பார்க்கிங் பகுதிகளில் இருந்து இராமநாதபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் மேற்குவாசல் வழியாக திட்டக்குடி வந்தடைந்து, கோவில் காவல் நிலையம், பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும்.
3. மேற்படி பார்க்கிங் பகுதிகளில் இருந்து தனுஷ்கோடி நோக்கி செல்லும் வாகனங்கள் மேற்குவாசல் வழியாக திட்டக்குடி வந்தடைந்து, தேவர் சிலை, இரயில்வே பீடர் ரோடு வழியாக செல்ல வேண்டும்.
4. தனுஷ்கோடியில் இருந்து இராமநாதபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் தேவர் சிலை, இரயில்வே பீடர் ரோடு, வண்ணார் தெரு, நகர் காவல் நிலையம், பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும்.
இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் வரை சாலையோர பகுதிகளில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீதும், பாம்பன் பாலத்தில் வாகனங்கள் நிறுத்தி, போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் நபர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், தை அமாவாசை பாதுகாப்பு பணிக்காக சுமார் 1000 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவங்களை தவிர்க்கும் விதமாக முக்கிய இடங்களில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேற்படி போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.தங்கதுரை,MA., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.