இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இராமேஸ்வரம் பகுதியில் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சதிஸ்குமார் அவர்கள் தலைமையில் காவலர்கள் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த போது மீனாட்சி மஹால் அருகே வந்த வாகனத்தை சோதனை செய்ததில், அதில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து வாகன ஓட்டுநர் ஜெகன், செந்தில், சரவணன் மற்றும் வெங்கட்ராமன் ஆகிய நால்வர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து நான்கு சக்கர வாகனம் மற்றும் சுமார் 60 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.