இராமநாதபுரம் : ஒரு சிறந்த காவல்துறை அதிகாரி இக்கட்டான சூழ்நிலைகளில் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் திரு.மயில்வாகனன் IPS அவர்கள். இவர் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியில் இருந்த சமயத்தில் தற்போது சாத்தான் குளத்தில் நடந்ததை போலவே ஒரு கஸ்டடி மரணம் இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டிணத்திலும் நடந்தது.
மக்கள் கொந்தளித்து இருந்த நேரம் மிக நேர்மையாகவும் துரிதமாகவும் செயல்பட்ட திருமிகு மயில்வாகனன் IPS அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட எஸ்.ஐ மீது கொலை வழக்கு பதிய உத்தரவிட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தார். வழக்கை மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு மாற்றினார். விசாரணையில் எவ்வித இடையூரும் இல்லாமல் பார்த்து கொண்டார். இறுதியில் அந்த எஸ்.ஐ க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இரண்டாவது சம்பவமாக இராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஒரு எஸ். ஐ கள்ள துப்பாக்கிகளை சமூக விரோதிகளுக்கு விற்று வருவதாக வந்த தகவலை அடுத்து உடடையாக அந்த எஸ்.ஐ மீதும் அதற்கு உடந்தையாக இருந்து அதை மறைத்த ஏட்டு மீதும் வழக்கு பதிவு செய்து பணி நீக்கம் செய்து சிறையில் அடைத்தார்.
இது போன்று பல சம்பவங்களில் திரு.மயில்வாகனன் IPS அவர்கள் மிக திறமையுடனும் , நேர்மையுடனும் செயல்பட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் அன்று அரசுக்கும் காவல்துறைக்கும் சவாலாக இருந்த பல மதவாத குழுக்களையும், இயக்கங்களையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். இவரை மாற்ற சொல்லி சமூக விரோதிகளும் , மதவாத அமைப்பினரும் பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தி நெருக்கடி கொடுத்தனர், இருந்த போதும் தான் இருந்த காலம் வரை மிக சிறப்பாக செயல்பட்டார். ஹலோ போலீஸ் அழைப்பு சேவை இவரது காலத்திலேயே இராமநாதபுரம் மாவட்டத்தில் கொண்டு வரப்பட்டது. மாவட்ட காவல் நிர்வாகத்தையும் கட்டமைப்பையும் சீரமைத்ததில் திரு.மயில்வாகனன் IPS அவர்களின் பங்கு முக்கியமானது. அதன் பின்னர் வந்த எஸ்.பி க்களான திரு.மணிவண்ணன் IPS, திருமிகு ஓம்பிரகாஷ் மீனா IPS, திரு.டாக்டர் வருன் குமார் IPS ஆகியோரும் மிக நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் நடந்து வருவதால் இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை மிக ஒழுக்கத்துடனும் , மனித நேயத்துடனும் நடந்து சட்ட ஒழுங்கை காத்து வருகிறது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்